Posts

முடி மன்னர்

முடி மன்னர் ================== (ஆறாம் திணை இதழில் எழுதியது) பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு வெளிப்புற படப்பிடிப்பு பார்க்க வந்திருந்த மணியும் சீனுவும் வியப்புடன் பார்த்தார்கள். "அங்க பாத்தியா, ஒரு கூடாரம் போட்டிருக்கு, அங்கதான் இருக்காராம். படம் எடுக்காதப்போ போய் படுத்துக்குவாராம். உள்ள வீடு மாதிரி இருக்குமாம், ஏசி கூட இருக்காம்" "நாம இப்ப போயிப் பாக்கலாமா" "கஷ்டம். வாச்சுமேன் வெரட்டுவான்" "அதோ பாரு, வாச்சுமேன் வெளியே வரான், அவருக்கு ஏதோ வாங்கியாரப் போறான் போல" "சீக்கிரம் வா, போய் பாத்துட்டு வரலாம்" இருவரும் கொட்டகையில் நுழைந்தபோது, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகைக்காய் தூள் விளம்பரத்துக்கு எடுத்த தன் புகைப்படத்தை ஆய்ந்து கொண்டிருந்த நடிகர் செல்வமணி சற்று திகைத்து, "என்ன தம்பிகளா, யாரு உள்ள விட்டாங்க ஒங்கள, என்ன வேணும் உங்களுக்கு" என்றார். "ஒண்ணும் இல்லீங்க. சூட்டிங்க பாக்க வந்தமா. ஒங்களப் பாக்கணும்னு தோணித்து. இங்க இருக்கீங்கன்னு பேசிக்கிட்டாங்க" "ஒங்க 'முடிமன்னன்' படத்த அ...

The Melting Pot

                            The Melting Pot       ( written by Narayan  Swaminathan, in Sulekha magazine 2001) ================================================= Venkat was getting bored reading the old magazines piled up on the desk in the doctor's office. He consulted his watch and looked at the receptionist's window. Cathy smiled at him and tried to comfort him, "It won't be long. You are next, you know". In a few minutes she called his name out and asked him to go in. Dr. Gupta received him warmly. He looked much younger than Venkat and the wall behind him was full of framed diplomas and certificates he had received over the years. His face radiated the calmness and composure of a psychologist. "Yes, Mr. Venkat, How can I help you? What is your problem?" "Doctor, I have no problem. The problem is with my k...

எழிற்கொள்ளை

 எழிற்கொள்ளை  ------------------------------- முடிவெட்ட இடந்தேடி அலைந்த போதினில்    மூலையில்  முளைத்த அழகுநிலையக் கடையில் பாவையர் முகங்கண்டு பரவசமாய் நின்றேன்.    பட்டுபோல் சருமத்துடன்  வெட்டுடன் வந்தாள் கட்டழகு மங்கை ஒருத்தி வேகமாய்    சிட்டுப்போல வேகமாய் விரல்கள் அசைத்தே சிரிப்புடன் 'வாருமுள்ளே' என்றே விளித்து     சிறுகடைக்குள் இழுத்து அழைத்துச் சென்றாள் அமரவொரு ஆசனம் காட்டி அமர்த்தினாள்     அன்புடன் பட்டுச் சால்வையைப் போர்த்தினாள் குப்பியில் குளிர்ந்த நீ£ரெடுத்து தெளிப்பானிட     குப்பென அப்பியதே சிறுநீர்த் திவலைகள் மணக்கும் விரலால் முடியைக் கோதினாள்     மதிமயங்கி விழிமூடி உறங்கம் கொண்டேன் எழுப்பி முகத்துக்கு  கண்ணாடி காட்டிட     எடைகுறைந்த தலையை உணர்ந்து தடவினேன் தலையும் இருந்தது முடிபோய்க் காய்ந்தமாடு    தாவிமேய்ந்த தரையாய் தஞ்சை வயலாய். "முகத்துக்கோர் மெழுகுண்டு முகத்துமரு போக்கிட    முகப்பொலிவும் வேண்டுமா ?" வினவினாள் அழகியும் முகம...

விதை நெல்

விதை நெல் ====================== ஓட்டலின் குளியறையில் குளித்துவிட்டு அவன் வெளியே வந்த போது, ரோசி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். இந்தியச் சூழலில் அந்த சீனப்பெண் வித்தியாசமாகவே தெரிந்தாள். "ரோசி, கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. முடிச்சிட்டு ஒரு மணியில திரும்பி வரேன். நீ இங்கயே இரு, இல்லாட்டி கடைத்தெருவுக்கு போய் ஷாப்பிங் செய்" "நானும் உன்னோட வரக்கூடாதா? நான் உன் சொந்தக்காரங்களைப் பார்க்க வேணாமா? "இல்ல ரோசி. இன்னும் நேரம் வரலே. நமக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா பிரச்னையாயிரும். உன்னை என் மனைவியா ஒத்துக்கமாட்டாங்க. லபோ திபோன்னு கத்தி ஊரு கூடும். தலைக்கு ஒண்ணா ஆளுக்கு ஆள் நியாயம் சொல்லுவான். ஒனக்கு ஏண்டா வந்தம்னு ஆயிரும்" அவளை சமாதானம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன், ஓட்டல் பணியாள் எதிரே வந்தான். "டாக்சி வேணும். ரெண்டு மணி ஆவும். பக்கத்துல கிராமத்துக்கு போகணும். வரச்சொல்லுங்க" டாக்சி வந்தது. காரோட்டி இறங்கி பின் கதவைத் திறந்துவிட ஏறி அமர்ந்தான். "வெளிநாட்டுலேருந்து வரீங்களா?" "ஆம்மா. அமெரிக்கா" " அமெரிக்காவா, சா...

வேரைத்தேடும் விழுது

வேரைத்தேடும் விழுது ====================== புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த பஸ் மரத்தடியில் நின்றது. சூட்டும் கோட்டும் அணிந்த ஒரு மனிதர் கையில் சிறு பெட்டியுடன் கீழே இறங்கினார். கருத்த நிறமும், வாட்ட சாட்டமான உடலும், வெளுத்த மீசையும், சூட்டும் கோட்டும், முகத்தில் தெரிந்த ஆப்பிரிக்க சாயலும் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று பறை சாற்றின. அவர் போகுமிடம் தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தார். பஸ் வந்த தார் சாலையிலிருந்து கப்பிக்கல் போட்ட ஒரு சாலை பிரிந்தது. எதிர்ப்பக்கம் வண்டித்தடங்களுடன் மண் சாலை தெரிந்தது. எந்தப்பக்கம் போவது என்று குழம்பியவராய் அங்குமிங்கும் பார்த்த போது, தூரத்தில் விளையாடும் சிறுவர்கள் கண்ணில் பட்டார்கள். வழி கேட்க அவர்களை நோக்கி நடக்கலானார். அவர் ஆங்கிலத்தில் கேட்டது அவர்களுக்கு புரியவில்லை. ' உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா' என்று ஆங்கிலத்தில் வினவ, அவர்கள் சிரித்து, "ஏ..பி..சி..டி ஒங்கப்பன் தாடி" என்று பாடினார்கள். அவர்களில் ஒருவன் சற்று துணிந்து, "தமிழ் தெரியுமா?" என்று கேட்டான். அவர்ஒரு புன்னகையுடன், "டமில், டமில...