முடி மன்னர்
முடி மன்னர்
==================
(ஆறாம் திணை இதழில் எழுதியது)
பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு வெளிப்புற படப்பிடிப்பு பார்க்க
வந்திருந்த மணியும் சீனுவும் வியப்புடன் பார்த்தார்கள்.
"அங்க பாத்தியா, ஒரு கூடாரம் போட்டிருக்கு, அங்கதான்
இருக்காராம். படம் எடுக்காதப்போ போய் படுத்துக்குவாராம்.
உள்ள வீடு மாதிரி இருக்குமாம், ஏசி கூட இருக்காம்"
"நாம இப்ப போயிப் பாக்கலாமா"
"கஷ்டம். வாச்சுமேன் வெரட்டுவான்"
"அதோ பாரு, வாச்சுமேன் வெளியே வரான், அவருக்கு
ஏதோ வாங்கியாரப் போறான் போல"
"சீக்கிரம் வா, போய் பாத்துட்டு வரலாம்"
இருவரும் கொட்டகையில் நுழைந்தபோது, சாய்வு நாற்காலியில்
அமர்ந்து சிகைக்காய் தூள் விளம்பரத்துக்கு எடுத்த தன் புகைப்படத்தை ஆய்ந்து
கொண்டிருந்த நடிகர் செல்வமணி சற்று திகைத்து, "என்ன தம்பிகளா,
யாரு உள்ள விட்டாங்க ஒங்கள, என்ன வேணும் உங்களுக்கு"
என்றார்.
"ஒண்ணும் இல்லீங்க. சூட்டிங்க பாக்க வந்தமா. ஒங்களப் பாக்கணும்னு தோணித்து.
இங்க இருக்கீங்கன்னு பேசிக்கிட்டாங்க"
"ஒங்க 'முடிமன்னன்' படத்த அஞ்சு தடவ பாத்தனே"
"நல்லது. சினிமா பாருங்க. தப்புல்ல. ஆனா படிப்பைக் கோட்டை விட்டுராதீங்க"
"சார், ஒங்க முடி இப்படி அழகா இருக்கு. என்ன எண்ணை
தடவறீங்க. ஒங்கள மாதிரி எனக்கும் முடிவேணும்னு ஆசை"
ஒட்ட வெட்டப்பட்ட சிறுவனின் முள்ளம்பன்றித்தலையைப் பார்த்து சிரித்தபடி
"தேங்கா எண்ணைதான். வாரத்துக்கு ஒரு முறை ஜாஸ்மின் ஷாம்பு போடுவேன்"
"ஏய், ஏய், யாரு நீங்க. வெளியே போங்க. அய்யா ரெஸ்ட் எடுக்கணும் " என்ற வாச்சுமேன்
குரல் கேட்டது.
"பரவாயில்ல, சிங்காரம், சின்ன பசங்க, சூட்டிங் பாக்க
வந்தாங்களாம். ஏதாச்சும் குடிக்க குடுத்து அனுப்பு"
என்றார் செல்வமணி பரிவுடன்.
வாச்சுமேன் வேண்டா வெறுப்பாக குடுத்த கோக்கோ கோலாவை ரசித்துக் குடித்து விட்டு வெளியேறினார்கள்.
செல்வமணி கண்ணாடியில் ஒரு முறை தன் முடி அழகை
பார்த்து மகிழ்ந்து கொண்டார். எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்
தன் வாழ்க்கையில், முடி வளர்க்க.
செல்வமணி இளமையில் எம்ஜியார் ரசிகர். இந்த முடி ஆசையே எம்ஜியாரைப்பார்த்து வந்ததுதான். சண்டை செய்யும்போது எம்ஜியார் தலையை சிலிர்த்து முடியை
பின்னுக்குத் தள்ளிக்கொள்வது அவரைக்கவர்ந்தது. பள்ளி நாட்களில்
கிராமத்தில் தன் வீட்டுக்கு வரும் நாவிதரிடம் "எம்ஜியார் மாதிரி வெட்டு" என்று தன் ஆசையை
சொல்லுவார். நாவிதர் வெட்டும்போது, செல்வமணியின்
அப்பா பின்னால் வந்து, ஒட்ட வெட்டிரு என்று சாடைகாட்டிவிட்டு போய் விடுவார். செல்வமணிக்கு கோபம் கோபமாய் வரும். நாவிதரைக் கோபிப்பார். "அய்யாதானே ஒட்ட வெட்டச்சொன்னாங்க" என்று அவர் பரிதாபமாக பதிலளிப்பார். இதோடு இல்லாமல், உடல் நலமில்லாது போனால் முடி காணிக்கை என்ற பேரில் தலை மொட்டையாகும். இல்லாவிட்டால் தெய்வ குற்றம் என்று பயமுறுத்துவார்கள். பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப்போனபிறகுதான் அவரால் தன்
இஷ்டத்துக்கு முடி வளர்க்க முடிந்தது. அப்புறம் நாடகம் சினிமா என்று போனவுடன் முடிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெரிய நடிகராக உயர்ந்தார். முடி மன்னன் என்ற படத்தில் நடித்தவுடன்
முடிமன்னர் என்ற பட்டம் கிடைத்தது. கேலிப்படம் வரைபவர்கள் சில கோடுகளால்
அவர் முடியை மட்டும் வரைந்தாலே போதும் என்கிற அளவுக்கு அவர் முடி
பிரபலமடந்தது. ரசிகர் கடிதங்களை செல்வமணியின் பெயருக்கு பதில் அவர் முடியின்
படம் மட்டும் வரைந்திருந்ததை வைத்து தபால்காரர்கள் இனம்கண்டுகொண்டு அவரிடம்
சேர்ப்பித்தார்கள். மகளிர் பத்திரிக்கைகளில் முடி பராமரிப்பு பற்றி அவர் சொன்னதை எழுதினார்கள்.
"சார், டைரக்டர் கூப்பிடராரு" என்ற குரல் வந்தவுடன் செல்வமணி இனிய நினைவுகளிலிருந்து விடுபட்டு எழுந்தார்.
"சார் ஒங்களுக்கு ஒரு குளோசப் ஷாட்டுதான். இப்படி
நில்லுங்க. ஒங்க ஷாட்டு முடிஞ்சவுடனே கவிதாவுக்கு
ஒரு ஷாட் இருக்கு. பாட்டுல ஒரு வரிக்கு ஒரு ஆக்ஷன்
எடுக்கணும்" என்றார் டைரக்டர்.
செல்வமணி தலையை ஸ்டைலாக அசைக்க, குளோசப் வெற்றிகரமாக முடிந்தது.
"தாங்ஸ், சார் நீங்க வேணா ரெஸ்ட் எடுத்துக்கலாம்" என்றார் டைரக்டர்.
"இல்ல. நான் அடுத்த ஷாட்டை வேடிக்க பார்க்கிறேன்" என்று
அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
உடனே ஒரு பணியாள் அவருக்கு குடைபிடித்தான். ஒருவன் ஒரு கோப்பை
ஆப்பிள் ரசத்தை நீட்டினான்.
ஒரு கொடிப்பந்தல் செட். அருகில் ஒரு ராட்சத மின்விசிரி.
பந்தலின் பின்புறத்தில் ஒரு தண்ணீர் லாரி நின்றிருந்தது.
அதிலிருந்து ஒரு எஞ்சின்வழியாக ஒரு குழாய் நீண்டு
பந்தல் மேல் முடிந்தது.
"ஆக்ஷன்" என்று டைரக்டர் சொன்னவுடன், தண்ணீர்க்
குழாயிலிருந்து நீர் மழைத்துளி போல பெய்ய, விசிரி
பெருங்காற்றை வீசியது. பந்தல் கொடிகள் வேகமாய் அசைந்தன.
"புயலில் சிக்கிய கொடியானேன்" என்ற பாடல் டேப்
ரிகார்டரில் இருந்து எழ, கவிதா உதட்டை அசைத்து
நனைந்த உடையில் பரிதாபமாக வந்தாள். டைரக்டரின் குறிப்பறிந்து
காமிராமேன் ஒரு பொத்தானை அமுக்க காமிராவின் லென்சு,
விசிரியையும், தண்ணீர் லாரியையும் கவனமாக தவிர்த்து கவிதாவின் ஈர
மார்பகத்தை நோக்கி ஆவலோடு முன்னேறியது. கவிதாவின்
நனைந்த உடலை முழுதும் காணமுடியாத ஒரு பணியாளர்,
தடையற்ற பார்வைக்காக அவசரமாக நகர, அவர் கை விசிரிமேல் பட்டதால்,
விசிரி சற்றே திசை திரும்பி செல்வமணிக்கு பிடித்த
குடையை மேல்நோக்கி பறக்கடித்து, பக்கவாட்டில்
நீரை வாரி இறைக்க, நாற்காலியில் இருந்த செல்வமணி,
சில நொடிகளில் தொப்பலாய் நனைந்தார்.
"கட், கட், கட். தண்ணிய நிறுத்துங்க. " என்று கத்தினார் டைரக்டர்.
அனைவரும் ஒரு பதைபதைப்புடன் வேலையை நிறுத்தினார்கள்.
"சார் உங்களுக்கு ஒண்ணும் ஆவலியே, இந்தாங்க"
என்று டைரக்டர் ஒரு பெரிய துண்டை செல்வமணி மீது போர்த்தினார். அவரை
ஒருவர் கைத்தாங்கலாக டென்ட்டுக்குள் அழைத்துப்போனார்.
"கையில காலுல விழுந்து வேலக்கி வந்துடரீங்க. ஒரு அடக்கம் வாணாம், வேல செய்யுற எடத்தில.
எவ்ளோ பெரிய ஆளு செல்வமணி. அவரு நெனச்சா இந்த படம் இன்னிக்கே நின்னுரும். கொஞ்சமாச்சும் அறிவு வாணாம்" என்று தயாரிப்பாளர் மிகுந்த கோபத்துடன் சொல்ல தவறிழைத்த ஊழியர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் போல் தலை குனிந்து ,கைகட்டி நின்றிருந்தார்.
தயாரிப்பாளரை டைரக்டர் சமாதானப்படுத்தினார்.
டென்ட் கதவு மூடப்பட்டிருந்தது. வெளியே வாச்சுமேன் விறைப்பாக நின்றிருந்தார். உள்ளே ஒரு துண்டைக்கட்டிக்கொண்டு நின்றிருந்தார் செல்வமணி.
"இப்ப என்ன செய்யறது" என்று கவலையோடு கேட்டார்.
"கவலப்படாதீங்க" என்று தேற்றிய ஒரு ஒப்பனைக் கலைஞர் செல்வமணியின் நனைந்த முடியில் கைவைத்து லாகவகமாக மேல்நோக்கி இழுக்க, முழுமுடியும் உரிந்து வழுக்கைத்தலை பளபளத்தது. அவர் தலையை துவட்டி, துடைத்து, தன் கைப்பெட்டியிலிருந்து ஒரு செயற்கை முடியை எடுத்துப் பொருத்த, கண்ணாடியில் தன்முகம் கண்டு செல்வமணியின் உதட்டில் ஒரு புன்னகை தவழ்ந்தது.
"இது மாதிரி ஏதாச்சும் நடக்குன்னுதான் உங்களுக்குன்னு இன்னொண்ணு எடுத்து வெச்சிருந்தேன்" என்றார் ஒப்பனையாளர்.
"நல்ல வேல செஞ்சே. எதுக்கும் ஊருக்கு போன ஒடனே பத்து வாங்கி ஸ்டாக் வெச்சிருக்கணும். இல்லாட்டி என் இமேஜ் என்னாகும்? மானம் போயிரும் " என்றார் செல்வமணி.
படப்பிடிப்பு முடிந்து இருவரும் வீடு திரும்பும்போது சீனு கேட்டான்,
"ஜாஸ்மின் ஷாம்பு எங்கடா கெடக்கிம் ? நேஷனல் ஸ்டோர்ல வெச்சிருப்பானா ?"
"தெரியாது. அவன்கிட்ட இல்லாட்டி எங்கக்கா மெற்றாசில இருக்கு.
சொன்னா வாங்கியாந்துரும்" என்றான் மணி பெருமையோடு.
=====================

Comments
Post a Comment