விதை நெல்
விதை நெல்
======================
ஓட்டலின் குளியறையில் குளித்துவிட்டு அவன் வெளியே வந்த போது, ரோசி பேப்பர் படித்துக்
கொண்டிருந்தாள். இந்தியச் சூழலில் அந்த சீனப்பெண் வித்தியாசமாகவே தெரிந்தாள்.
"ரோசி, கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. முடிச்சிட்டு ஒரு மணியில திரும்பி வரேன். நீ இங்கயே
இரு, இல்லாட்டி கடைத்தெருவுக்கு போய் ஷாப்பிங் செய்"
"நானும் உன்னோட வரக்கூடாதா? நான் உன் சொந்தக்காரங்களைப் பார்க்க வேணாமா?
"இல்ல ரோசி. இன்னும் நேரம் வரலே. நமக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா பிரச்னையாயிரும்.
உன்னை என் மனைவியா ஒத்துக்கமாட்டாங்க. லபோ திபோன்னு கத்தி ஊரு கூடும். தலைக்கு
ஒண்ணா ஆளுக்கு ஆள் நியாயம் சொல்லுவான். ஒனக்கு ஏண்டா வந்தம்னு ஆயிரும்"
அவளை சமாதானம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன், ஓட்டல் பணியாள் எதிரே வந்தான்.
"டாக்சி வேணும். ரெண்டு மணி ஆவும். பக்கத்துல கிராமத்துக்கு போகணும். வரச்சொல்லுங்க"
டாக்சி வந்தது. காரோட்டி இறங்கி பின் கதவைத் திறந்துவிட ஏறி அமர்ந்தான்.
"வெளிநாட்டுலேருந்து வரீங்களா?"
"ஆம்மா. அமெரிக்கா"
" அமெரிக்காவா, சார், அங்க அரிசி வெல எப்படிங்க?"
"கிட்டத்தட்ட இங்க விக்கற வெலதான்"
"அங்க சம்பளம் ஜாஸ்தியில்ல. சிரமம் தெரியாது. இங்க வெளச்சல் இருக்கு. பத்தல.
சனத்தொகை அதிகமாயிருச்சு இல்ல. இன்னிக்கு அரிசி வெல உயர்வை எதிர்த்து
ஒரு பேரணி நடத்தப்போறாங்க. அதுக்குள்ளாற திரும்பிடணும். இல்லாட்டி ரோட்டை
அடைச்சிடுவாங்க. மாட்டிக்குவோம்"
ஒரு சிறு பயணத்துக்குப் பின் கிராமம் கண்ணில்பட்டது.
"அப்படிய இந்த மரத்தடில நிறுத்திக்க. வண்டி உள்ள போகமுடியாது. நான் ஒரு மணிக்குள்ள
வந்துடறேன்" என்று சொல்லி கால் ஷூவை கழற்றி காரில் வைத்துவிட்டு, கால்சட்டையை
முழங்கால் வரை மடித்துவிட்டுக்கொண்டு, வெளியே வந்து, ஒரு குறுகிய மேடான தெருவில்
ஏறி உள்ளே போனான்.
அவன் படித்த பழைய பள்ளி அருகே ஒரு கணம் நின்றான்.. வேணு சார் நினைவு வந்தது.
"கென்னடி என்ன சொன்னாரு தெரியுமா, என் நாடு எனக்கு என்ன பண்ணிச்சுன்னு கேக்காதரா,
நீ ஒன் நாட்டுக்கு என்ன பண்ணினேன்னு கேளுன்னு சொன்னாரு. படி, முன்னுக்கு வா. நாட்டுக்கு
ஏதாச்சும் செய்".
நினைவை அசை போட்டுக்கொண்டே இன்னம் நடந்தான். சுற்றிலும் பசுமை படர்ந்த வயல்கள்.
நடுவே திருஷ்டி வைத்தால்போல் ஒரு காய்ந்த வயல். ஓரத்தில் ஒரிரு தென்னைமரங்கள். நடுவே
ஒரு வீடு.
"அம்மா" என்று குரல் கொடுக்க ஒரு மூதாட்டி வெளிப்பட்டாள். மகிழ்ச்சியுடன், "வாடா
செல்வராசு. ரயில்ல வந்தியா, வா, வா" என்று வரவேற்க அவன் கட்டிலில் அமர்ந்தான்.
" என்னப்பா, அப்பா செத்தப்ப வராம போயிட்ட. ஊரே கேட்டுது ஏம் புள்ள வரலேன்னு. தந்தி கூட குடுத்தமே. ஒரு வாரம் கழிச்சு ஒன் லெட்டரும் பணமும் வந்திச்சு. எல்லாருக்கும் கொறைதான்"
"அம்மா, நெனச்சா வர எடத்திலா நா இருக்கேன். லீவு கெடக்கில. அப்பாவுக்கு என்னாச்சு "
"அது என்ன எழவோ தெரிலப்பா. ஆடிக்கு வெதச்சப்போ நாத்து சரியா மொளக்கிலே.
தெய்வக்குத்தம்னு பூசாரி சொன்னாரு. கோழியடிச்சு பூசை பண்ணச்சொன்னாரு.
பண்ரதுகுள்ள சுரம்னு ஒரு நாள் படுத்தாரு. எழுந்திரிக்கலே."
"போன வருஷம் விளச்சல் நல்லா இருந்தது, இல்ல "
"போன வருஷம் நல்ல இருந்துச்சு. அப்பாவுக்கு சந்தோஷம். விதை நெல்லை விருந்தாளிக்கு
பொங்கிப்போட செலவழிச்சுட்டம்னு சொன்ன ஒடனே, எம்புள்ள நெல்லு வாங்கி தபால்ல
பார்சலா அனுப்பிட்டான்னு சொல்லி சொல்லி பெருமப்பட்டாரு. அந்த வெளச்சல்ல எடுத்த
விதநெல்லு இந்த வருஷம் வெளயாம போச்சு"
விருட்டென எழுந்து உள்ளே போனான். தலையில் நுழைவாசலில் தொங்கிய சுரைக்காய் குடுவை
இடித்தது. வருஷாவருஷம் விதைக்குமுன் சிறிது விதை நெல்லை அதில் போட்டு நிலைப்படியில்
கட்டுவது வழக்கம். விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று நம்பிக்கை.
அதைக்கழற்றி தன் பையில் பத்திரமாக வைத்துக்கொண்டான். அப்பாவின் நினைவாகவோ?
"அம்மா, எனக்கு தங்க நேரமில்ல. ஊருக்கு திரும்பணும். இந்தா இதுல ஐயாயிரம் ரூவா இருக்கு.
செலவுக்கு வெச்சுக்க. இன்னம் வேணுன்னா கேளு தரேன். நெலம் வெளயலேன்னு இருக்காதே.
ஆள வெச்சுக் கொத்திட்டு கரும்பு போடச்சொல்லு. நா வரட்டா"
"என்னயா, காலில கஞ்சிய கொட்டிட்டு ஓடர, ரெண்டு நாளு இருப்பன்னு நெனச்சனே. நீ இனிம
எப்ப வருவ. சீக்கிரம் வந்து ஒரு பொண்ணெ கட்டிக்கிட்டு எனக்கு கஞ்சி ஊத்துவன்னு பாத்தேன்,
நடக்கற வழியா இல்லியே"
"அதுக்கு இப்ப நேரமில்ல. ஒனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் அனுப்பறேன். நா இங்க
வரதுக்கு நாளாகும்"
"நீ என்னைக் காப்பத்தறேன்னு சொன்ன வார்த்தயே போதுண்டா. அனுபவிக்காம செத்துட்டாரு
ஒங்க அப்பா. சோறாக்கி வெச்சுருக்கன், ஒரு வாய் சாப்பிட்டிட்டு போப்பா"
பசியோடு அறையில் ரோசி காத்திருப்பது நினைவு வந்தது.
"அம்மா, இப்ப பசியில்ல. ஒரு எலையில கட்டிக்குடு. அப்புறமா சாப்பிட்டுப்பேன். எனக்கு சீக்கிரம்
போகணும்"
தாய் கட்டிக்குடுத்த சோற்றுடன் மெதுவே வெளியேறினான்.
"இனிம எப்பய்யா வருவ இந்தப்பக்கம்" என்று கேட்டவளுக்கு "வரம்மா. முடிஞ்சப்ப வரேன்" என்று
பதிலளித்துவிட்டு தெருவில் இறங்கி காரை நோக்கிப்போனான்.
அறையில் ரோசி பெட்டிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்.
பொட்டலத்தை மேசை மீது வைத்தான். "இந்தியா சாப்பாடு சாப்பிடுரியா, இதில இருக்கு, எடுத்துக்க,
ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்" என்றான்.
பெட்டியிலிருந்து ஒரு கணினியை எடுத்து, இணைப்பு கொடுத்து, மடியில் வைத்துக்கொண்டு ஒரு மின்மடல் எழுதலானான்.
"அன்புள்ள ராபர்ட் , நம் சோதனை வெற்றி பெற்றது. நம் ஆராய்ச்சிசாலையின் முடிவுகள் இங்கு
மறுபடியும் நிரூபணமாயின. மரபணுக்கள் மாற்றப்பட்ட நெல் ஒருமுறை நன்றாக விளைந்தது.
விளைந்த பயிரில் எடுக்கப்பட்ட விதை நெல் மறுபடியும் முளைக்கவில்லை. இந்த நெல்லின் சாம்பிளை
மேற்கொண்ட ஆய்வுக்கு உங்களுக்கு தனி அஞ்சலில் அனுப்புகிறேன்.
இந்த ஆய்வுகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளேன். நாம் தயாரித்துள்ள மரபணு
மாற்றப்பட்ட நெல்லை பெரும் அளவில் கொள்முதல் செய்து அரசாங்கம் மூலமாக தமிழகமெங்கும்
குறைந்த செலவில் வினியோகிக்க ஒரு வியாபாரி காத்திருக்கிறார். அவரை இன்னம் இரு நாட்களில்
சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிவிடுவேன். தொடர்ந்து நாம் பெருமளவில் இங்கு நெல்
வியாபாரம் செய்ய நல்ல வாய்ப்பு இருக்கும். இதற்கான என் கமிஷன் தொகையை என் கணக்கில் அங்கு
வங்கியில் கட்டிவிடவும். திரும்பும் முன் தாய்வான் போய் என் மனைவியின் பெற்றோருடன் ஒரு வாரம்
தங்கி இருந்துவிட்டு வருகிறேன். மற்றவை நேரில் ...."
அனுப்பும் பொத்தானை அவன் விரல் அழுத்தியது.
================================================
Narayan Swaminathan
published in India Today

Comments
Post a Comment