எழிற்கொள்ளை
எழிற்கொள்ளை ------------------------------- முடிவெட்ட இடந்தேடி அலைந்த போதினில் மூலையில் முளைத்த அழகுநிலையக் கடையில் பாவையர் முகங்கண்டு பரவசமாய் நின்றேன். பட்டுபோல் சருமத்துடன் வெட்டுடன் வந்தாள் கட்டழகு மங்கை ஒருத்தி வேகமாய் சிட்டுப்போல வேகமாய் விரல்கள் அசைத்தே சிரிப்புடன் 'வாருமுள்ளே' என்றே விளித்து சிறுகடைக்குள் இழுத்து அழைத்துச் சென்றாள் அமரவொரு ஆசனம் காட்டி அமர்த்தினாள் அன்புடன் பட்டுச் சால்வையைப் போர்த்தினாள் குப்பியில் குளிர்ந்த நீ£ரெடுத்து தெளிப்பானிட குப்பென அப்பியதே சிறுநீர்த் திவலைகள் மணக்கும் விரலால் முடியைக் கோதினாள் மதிமயங்கி விழிமூடி உறங்கம் கொண்டேன் எழுப்பி முகத்துக்கு கண்ணாடி காட்டிட எடைகுறைந்த தலையை உணர்ந்து தடவினேன் தலையும் இருந்தது முடிபோய்க் காய்ந்தமாடு தாவிமேய்ந்த தரையாய் தஞ்சை வயலாய். "முகத்துக்கோர் மெழுகுண்டு முகத்துமரு போக்கிட முகப்பொலிவும் வேண்டுமா ?" வினவினாள் அழகியும் முகம...